AroundMaps Logo
Search
Add Listing

Palaly Community Organisation-LK பலாலி

0

Map

Item Reviews - 7

Anynomous

"

பலாலி சமூக அமைப்பினால் பலாலி கிழக்கு (J/253) பிரிவில் முன்பள்ளி கட்டடம் அமைக்கப்படுகின்றது இத்திட்டம் எமது அமைப்பினால் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் முதலாவது பெரிய திட்டமாகும் �இதுவரை காலமும் எமது கிராமத்தில் முன்பள்ளி ஓன்று இல்லாத காரணத்தினாலும் எமது உறவுகளின் கல்வியின் தரத்தினை உயர்த்தும் நோக்கத்திலும் சிறுவர் முன்பள்ளி கட்டடத்தினை அமைப்பதற்கு எமது அமைப்பினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தற்பொமுது இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. �இதேபோல் அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாக தொடர்ந்து மேற்கொள்ள உங்கள் அனைவரது ஆதரவினை எதிர் பார்க்கின்றனர் பலாலி சமூக அமைப்பின் புதிய நிர்வாகத்தினர். ��எமது உறவுகளிடமிருந்து பெறப்படும் அனைத்து நிதிகளும் தாயகத்தில் அபிவிருத்தி தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

"

29 November 2017

Anynomous

"

பலாலி கிழக்கு J/253 பிரிவில் பலாலி சமூக அமைப்பினால் சிறுவர் முன்பள்ளி கட்டடம் அமைப்பதற்காக ஆரம்ப கட்டமாக வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதனை எமது பலாலி வாழ் உறவுகள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

பலாலி உறவுகளே!!!!!!!! உங்கள் மண்ணில் உங்கள் உறவுகள் வாழும் பிரதேசத்தில் ... உங்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் வெற்றிகரமாக தொடர்ந்து நடைபெறுவதற்கு உங்களால் முடிந்தளவு உதவியினை வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கோட்டுக்கொள்ளுகின்றனர் பலாலி சமூக அமைப்பின் நிர்வாகத்தினர்

பலாலி சமூக அமைப்பினால் பலாலி மண்ணில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.................

See More "

24 November 2017

Anynomous

"

பலாலி முன்பள்ளி காணி

திரு திருமதி சின்னத்துரை மல்லிகாவதி அவர்களினால் அவரது கணவர் அமரர் செல்லையா சின்னத்துரை அவர்களின் ஞாபகார்த்தமாக 2 பரப்பளவு காணியும் திரு செல்லையா கந்தையா (அமரர் செல்லையா சின்னதுரையின் சகோதரர்) அவர்களினால் 1/4 பரப்பளவு காணியும் பலாலி J/253 கிராம சேவையாளர் பிரிவில் முன்பள்ளி கட்டடம் அமைப்பதற்காக பலாலி சமூக அமைப்புக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. இரண்டு குடும்பங்களுக்கும் பலாலி சமூக அமைப்பும் பலாலி மக்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றனர்.

"

19 November 2017

Anynomous

"

எமது பலாலி உறவுகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!!!!!

"

17 November 2017

Anynomous

"

எங்கள் பலாலி மண் பெற்றெடுத்த செல்வி சோபிதா முகுந்தன் அவர்கள் வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலத்தில் தரம்13இல் கல்வி கற்கும் காலத்தில் எழுதிய கவிதையானது, "ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள்" என்னும் உலகளாவிய கவிஞர்களால் (32 நாடுகளை சேர்ந்தவர்கள்) எழுதப்பட்ட கவிதைகளில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டு 21.10.2017(சனிக்கிழமை)இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.இந்நூலானது 1800பக்கங்ளை கொண்டது. இதன் நிறை 4.5kg கொண்டது. இவர் எழுதிய கவிதைகள்,கட்டுரைகள்,சிறுகதை தொகுப்புக்களுக்கு அகில இலங்கை ரீதியில் விருதுகள் , சான்றிதழ்கள் ,பாரட்டுக்கள், பணப் பரிசுகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

"

21 October 2017

Anynomous

"

யாழ் பலாலி அம்மன் கோவிலில் இன்று (20.09.2017) நவராத்திரி பூஜை நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடை பெரும் என்பதனை அம்மன் அடியார்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

"

20 September 2017

Anynomous

"

யாழ் பலாலி பத்திரகாளி கோவிலில் இன்று (20.09.2017)நவராத்திரி பூஜை நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்று 10 வது நாள் வாழை வெட்டு நிகழ்வும் நடைபெறும் என்பதனை அனைத்து பத்திரகாளி கோவில் அடியார்களுக்கும் அறியத்தருகின்றோம்.

"

20 September 2017

Add Reviews & Rate item

Your rating for this listing :

Help Us to Improve :

Location / Contacts :